அதிமுக துணைப்பொதுச் செயலாளர்களாக கே.பி. முனுசாமி, நத்தம் விஸ்வநாதன் நியமனம்: எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு

சென்னை: கடந்த 11-ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி நியமிக்கப்படிருந்தார். அதுமட்டும் அல்லாமல் புதிய நிர்வாகிகள் அனைவரையும் நியமிக்க கூடிய அதிகாரம் குறித்து சட்ட விதிகள் திருத்தம் செய்யப்பட்டு இடைக்கால பொதுச்செயலாளருக்கு அந்த அதிகாரம் வழங்கப்பட்டிருந்தது. மேலும் துணை பொதுச்செயலாளரை நியமிக்கும் அதிகாரமும் அவருக்கு வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், புதிய நிர்வாகிகளை தற்போது நியமித்து அது தொடர்பான அறிவிப்பையும் அதிகார பூர்வமகா எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ளார். அதில் அதிமுகவிற்கு துணை பொதுச்செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் கழக தலைமை நிலைய செயலாளர், அமைப்பு செயலாளர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் அனைவருக்கு இதில் முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் துணை பொதுச்செயலாளர் பொறுப்பில் கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் பொன்னையன் அமைப்பு செயலாளர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டு. எம்.ஜி.ஆர். மன்ற செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மேலும் எடப்பாடி பழனிசாமி வகித்து வந்த தலைமை நிலைய செயலாளர் பதவி எஸ்.பி.வேலுமணிக்கு வழங்கப்பட்டுள்ளது.

Related Stories: