அதிமுக முன்னாள் அமைச்சர் RB உதயகுமார் முன்னாள் வருவாய்த்துறை செயலாளர் மீது மோசடி புகார்

திருப்பூர்: அதிமுக முன்னாள் அமைச்சர் RB உதயகுமார் முன்னாள் வருவாய்த்துறை செயலாளர் அதுலியா மித்ரா உள்ளிட்டோர் மீது ரூ.50 கோடி மோசடி புகார் கூறப்பட்டுள்ளது. கடந்த ஆட்சியில் திருப்பூர் நஞ்சராயன்குளம் கரையில்  நீர் பாதையில் உள்ள ரூ.50 கோடி மதிப்பில்லான அரசு நிலத்தை தனியார் டிரஸ்ட்க்கு ரூ. 9.30 கோடி விற்பனை செய்ததில் ஊழல் நடைபெற்று இருப்பதாக நஞ்சராயன் பாதுகாப்பு இயக்கத்தினர் புகார் தெரிவித்துள்ளனர்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளிக்கப்படும் மனுவில் முன்னாள் அமைச்சர் RB உதயகுமார் அப்போதைய வருவாய்த்துறை செயலாளர் அதுலியா மித்ரா மற்றும் திருப்பூர் மாவட்டம் ஆட்சியார்கள்ளாக இருந்த கோவிந்தராஜன், விஜய கார்த்திக்கேயன் ஆகியோர் மீது மோசடி குறித்து விசாரணை நடத்த லஞ்சம் ஊழல் ஒழிப்பு துறை பரிந்துரைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

நிலத்தை வாங்கிய வித்த செய்யவ டிரஸ்ட் அமைப்பினர் தற்பொழுது நஞ்சராயன்குளம் கரையில் இருந்து சாலை வரை நீர் வலி பாதைகளை மறித்து கட்டுமான பணிகளை செய்து வருவதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது. எனவே  ரூ.50 கோடி மதிப்புள்ள நிலத்தை அடிமாட்டு விலைக்கு விற்கப்பட்ட உரிமைக்கு ரத்துசெய்ய வேண்டும் என அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டது.

Related Stories: