கீழ்குந்தா, அதிகரட்டி, பேரூராட்சிகளில் ‘எனது குப்பை, எனது பொறுப்பு’ விழிப்புணர்வு முகாம்

மஞ்சூர் : அதிகரட்டி பேரூராட்சி சார்பில் ‘எனது குப்பை, எனது பொறுப்பு’ குறித்து விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. தமிழக அரசின் நகராட்சி நிர்வாக இயக்குனரகத்தின் சார்பில் மாநிலம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளில் நகரங்களின் துாய்மைக்கான மக்கள் இயக்கத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் மஞ்சூர் அருகே உள்ள அதிகரட்டி பேரூராட்சிகுட்பட்ட கெந்தளா கிராமத்தில்  விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. அதிகரட்டி பேரூராட்சி தலைவர் பேபி தலைமை தாங்கி முகாமை துவக்கி வைத்தார்.  செயல் அலுவலர் ஜெகநாதன், துணை தலைவர் செல்வன், வார்டு கவுன்சிலர்  ஜெயராம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 இதை தொடர்ந்து நடந்த முகாமில் எனது குப்பை, எனது பொறுப்பு குறித்து பொதுமக்கள், வியாபாரிகள், மாணவ, மாணவிகள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் அனைத்து கவுன்சிலர்கள், பேரூராட்சி ஊழியர்கள் மற்றும் துாய்மை பணியாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர. இதை தொடர்ந்து பேரூராட்சிகுட்பட்ட பகுதிகளில் உள்ள பொது கழிப்பிடங்கள், வடிகால்வாய்கள், பேரூராட்சி சாலைகள், பேருந்து நிலையப்பகுதிகளில் தீவிர துாய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

மேலும்  எனது குப்பை, எனது பொறுப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதேபோல் கீழ்குந்தா பேரூராட்சி சார்பில் துாய்மைக்கான மக்கள் இயக்க திட்டத்தின் கீழ் மஞ்சூர் பகுதியில் எனது குப்பை, எனது பொறுப்பு என்ற தலைப்பில் விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. பேரூராட்சி செயல் அலுவலர் ரவிக்குமார் முகாமை துவக்கி வைத்தார். இதில் கீழ்குந்தா பேரூராட்சி கவுன்சிலர்கள் மற்றும் பேரூராட்சி ஊழியர்கள், துப்புரவு பணியாளர்கள் கலந்து கொண்டார்கள். தொடர்ந்து துாய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டதுடன் வியாபாரிகள், பொதுமக்கள் மத்தியில் எனது குப்பை, எனது பொறுப்பு குறித்து உறுதிமொழி ஏற்கப்பட்டது.

Related Stories: