மேற்கு தொடர்ச்சி மலைகளில் கனமழை; மஞ்சளாறு அணை நீர்மட்டம் 49 அடியாக உயர்வு

தேவதானப்பட்டி: தேனி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சிமலையில் கொடைக்கானல் அடிவாரத்தில் அமைந்துள்ளது மஞ்சளாறு அணை. இந்த அணை நீர் மூலம் இப்பகுதி விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர். கடந்த ஆண்டு நல்லமழை பெய்ததால் அணை நிரம்பியது. இந்த ஆண்டும் மழை பெய்து அணை நிரம்பும் என விவசாயிகள் காத்து இருந்தனர்.

இந்நிலையில் தற்போது தென்மேற்கு மலை தீவிரமடைந்துள்ளதால் மேற்கு தொடர்ச்சி மலைகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் மஞ்சளாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தற்போது அணை 49.2 அடியை உயர்ந்துள்ளது. மொத்த உயரம் 57 அடி ஆகும். மேலும் நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்தால் விரைவில் அணை நிரம்பும் என விவசாயிகள் தெரிவித்தனர். அணை உயர்வால் பாசன பரப்பு விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Related Stories: