அகரமேல் ஊராட்சி 3வது வார்டில் கூடுதலாக 40 வாக்குகள் பதிவு: அதிகாரிகளிடம் வாக்குவாதத்தால் பரபரப்பு

பூந்தமல்லி: அகரமேல் ஊராட்சியில் கூடுதல் வாக்கு பதிவானதால் அதிமுக உள்ளிட்ட கட்சியினர், அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பூந்தமல்லி ஒன்றியம், அகரமேல் ஊராட்சியில் 3வது வார்டு உறுப்பினர் பதவி காலியாக இருந்தது. இந்த இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் திமுக, அதிமுக, சுயேச்சை என 3 பேர் போட்டியிட்டனர். இங்கு மொத்தம் 343 வாக்காளர்கள் வரிசையில் நின்று ஓட்டுப்பெட்டியில் சீட்டு மூலம் வாக்களித்தனர். பின்னர் வாக்குப்பதிவு முடிந்ததும், மொத்தம் 289 வாக்குகள் பதிவானதாக பூத் ஏஜெண்டுகள் மற்றும் வேட்பாளர்கள் தெரிவித்தனர்.

எனினும், வாக்கு எண்ணிக்கை முடிவில் 329 வாக்குகள் பதிவானதாக தேர்தல் நடத்தும் அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் கூடுதலாக 40 வாக்குகள் எப்படி பதிவானது என சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வேட்பாளர்களும், கட்சியினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் வாக்கு பெட்டிகளை எடுத்துச் செல்லவிடாமல் தடுத்து நிறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து புகார் அளித்தால், மாவட்ட கலெக்டரிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்ததையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. வாக்குப்பதிவு முடிந்ததும், மொத்தம் 289 வாக்குகள் பதிவானதாக பூத் ஏஜெண்டுகள் மற்றும் வேட்பாளர்கள் தெரிவித்தனர். எனினும், வாக்கு எண்ணிக்கை முடிவில் 329 வாக்குகள் பதிவானதாக தேர்தல் நடத்தும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: