மயிலாப்பூர் ஆடிட்டர் தம்பதி கொலை வழக்கில் நீதிமன்றத்தில் நாளை மறுநாள் குற்றப்பத்திரி்கை தாக்கல்; 2 மாதத்தில் விசாரணையை முடித்த போலீசாருக்கு பாராட்டு

சென்னை: மயிலாப்பூர் ஆடிட்டர் தம்பதியை  கொலை செய்து ரூ.5 கோடி மதிப்புள்ள தங்கம் மற்றும் வெள்ளி கொள்ளையடித்த வழக்கில், குற்றவாளிகள் மீது 2 மாதத்தில் குற்றப்பத்திரி்கை தாக்கல் செய்வதற்கான பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். சென்னை மயிலாப்பூர், பிருந்தாவன் கார்டன் பதியை சேர்ந்த தம்பதி  காந்த் (60), அனுராதா (55). இவர்கள் தங்களது பிள்ளைகளை பார்ப்பதற்காக அமெரிக்கா சென்று இருந்தனர். கடந்த மே 7ம் தேதி அதிகாலை ஆடிட்டர் தனது மனைவி அனுராதாவுடன் சென்னை திரும்பினார். அவர்களை விமான நிலையத்தில் இருந்து அழைத்து வர, நேபாளத்தை சேர்ந்த கார் டிரைவர் பதம்லால் கிஷன்(எ) கிருஷ்ணா சென்றார். சென்னைக்கு சென்ற பெற்றோர் போன் செய்யாத காரணத்தால் சந்தேகம் அடைந்த ஆடிட்டர் மகள், உடனடியாக  அடையாறில் உள்ள உறவினர்  ஒருவரை தங்கள் வீட்டுக்கு அனுப்பினர்.

மேலும், மயிலாப்பூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன்படி போலீசார் ஆட்டிடர் வீட்டிற்கு வந்து கதவை உடைத்து பார்த்த போது, வீட்டில் ரத்த கறைகள் இருந்தது. பின்னர் தொடர் விசாரணையில், கார் டிரைவர் கிருஷ்ணா பணம் மற்றும் நகைக்காக ஆடிட்டர் மற்றும் அவரது மனைவியை கொடூரமாக கொலை செய்து மாமல்லபுரம் நெமிலிச்சேரி அருகே உள்ள சூளேரிக்காடு பண்ணை வீட்டில் உடல்களை பூதைத்தது தெரிவந்தது. உடனே போலீசார் எடுத்த தீவிர நடவடிக்கையால் சாலை மார்கமாக காரில் நேபாளம் தப்பி சென்ற கார் டிரைவர் கிருஷ்ணா மற்றும் டார்ஜிலிங்கை சேர்ந்த அவரது நண்பர் ரவி ராய் ஆகியோரை ஆந்திரா போலீசார் உதவியுடன் ஆந்திரா ஒங்கோல் சுங்கச்சாவடியில் கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து ரூ.5 கோடி மதிப்புள்ள 9 கிலோ தங்கம், வைரம், பிளாட்டினம் நகைகள், 70 கிலோ வெள்ளி பொருட்கள், கொலைக்கு பயன்படுத்திய உருட்டு கட்டை, கத்தி மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட நேபாளத்தை சேர்ந்த கிருஷ்ணா மற்றும் ரவி ராய் ஆகியோர், நகை மற்றும் பணத்திற்காக ஆசைப்பட்டு காந்த் மற்றும் அவரது மனைவி அனுராதாவை கொன்றதை ஒப்புக்கொண்டனர். இந்த வழக்கில் குற்றவாளிகள் 2 பேரும் குற்றத்தை ஒப்புக்கொண்டதால் போலீசார் நீதிமன்றத்தில் விரைந்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து குற்றவாளிகள் 2 பேருக்கும் தண்டனை பெற்றுதரும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் மயிலாப்பூர் ஆடிட்டர் தம்பதி கொலை வழக்கில் மயிலாப்பூர் குற்றப்பிரிவு போலீசார் குற்றப்பத்திகை தாக்கல் செய்வதற்கான பணிகளில் தற்போது முழு வீச்சியில் ஈடுபட்டு உள்ளனர். இதையடுத்து இரட்டை கொலை வழக்கில் 2 மாதத்தில் மயிலாப்பூர் போலீசார் வரும் புதன்கிழமை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளனர். அதற்கான பணிகளிலும் ஈடுபட்டு வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். 2 மாதத்தில் விசாரணையை முடித்த போலீசாருக்கு உயர் அதிகாரிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Related Stories: