தமிழகத்திலிருந்து 1672 பேர் ஹஜ் பயணம்

சென்னை: இந்திய ஹஜ் அசோசியேஷன் தலைவர் பிரசிடெண்ட் அபுபக்கர் வெளியிட்டுள்ள அறிக்கை: இந்த ஆண்டு உலகம் முழுவதும் இருந்து 8 லட்சத்து 99 ஆயிரத்து 353 பேர் ஹஜ் பயணம் செய்துள்ளதாக புள்ளிவிபரங்களுக்கான சவுதி பொது ஆணையம் தகவல் அளித்துள்ளது. இதில் வெளிநாடுகளில் இருந்து சுமார் 7 லட்சத்து 80 ஆயிரம் பேர் வந்துள்ளனர்.இவர்களில் சுமார் 21 சதவீதம் பேர் அரபு நாடுகளைச் சேர்ந்தவர்கள். இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளிலிருந்து 58 சதவீதம் பேர் வந்துள்ளனர். தமிழகத்தை பொருத்தமட்டில் 1672 பேர் ஹஜ் பயணம் மேற்கொண்டுள்ளனர். இவர்களில் 860 பேர் ஆண்கள்,  812 பேர் பெண்கள்.

Related Stories: