வெங்கல்குப்பம் கிராமத்தில் பாழடைந்துள்ள குடிநீர் தொட்டி: புதிதாக கட்டித்தர வலியுறுத்தல்

பெரியபாளையம்: வெங்கல்குப்பம் கிராமத்தில் 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட குடிநீர் மேல்நிலை தொட்டியை அகற்றிவிட்டு புதிய குடிநீர் மேல்நிலை தொட்டி கட்டித்தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

எல்லாபுரம் ஒன்றியம் பெரியபாளையம் அருகே வெங்கல் ஊராட்சிக்குட்பட்ட வெங்கல் குப்பம் கிராமத்தில் பெருமாள் நகர் பகுதியில் சாலை ஓரம் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பாக 10 ஆயிரம் கொள்ளளவு கொண்ட குடிநீர் மேல்நிலைத் தேக்க தொட்டி ஒன்று உள்ளது. இதன் அருகே பேருந்து பயணிகள் நிழற்குடையும் உள்ளது. இந்த கட்டிடங்கள் மிகவும் பழுதடைந்து கான்கிரீட்டுகள் உடைந்து அதற்குள்ள கம்பிகள் வெளியே தெரிந்தபடி ஆபத்து விளைவிக்கும் வகையில் உள்ளது. இதனால் இந்த கட்டிடங்களை அகற்ற வேண்டும் என ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் பலமுறை எல்லாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் மனு அளிக்கப்பட்டது. ஆனாலும் அதிகாரிகள் இதுவரை எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. எனவே, இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: