மெரினா கடற்கரையில் ட்ரோன் கண்காணிப்பு; போலீஸ் அதிகாரி தகவல்

சென்னை: குற்றங்களை தடுக்கும் வகையில் மெரினா கடற்கரையில் ட்ரோன்கள் மூலம் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என திருவல்லிக்கேணி காவல் உதவி ஆணையர் பாஸ்கர் தெரிவித்தார். இதுகுறித்து திருவல்லிக்கேணிகாவல் உதவி ஆணையர் பாஸ்கர் கூறியதாவது: மெரினா கடற்கரைக்கு தினசரி ஏராளமான மக்கள் வருகின்றனர். சென்னை மட்டும் அல்லாது பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள் இங்கு வந்து செல்கின்றனர்.

குறிப்பாக காலை, மாலை நேரங்களில் நடைபயிற்சி செய்வோரின் எண்ணிக்கையும் அதிகமாகவுள்ளது. இதனால் எப்போது மெரினாவில் கூட்டம் அதிகமாக காணப்படும். இந்த கூட்டத்தை பயன்படுத்தி பல்வேறு குற்றச்செயல்கள் நடந்து வருகிறது. இந்நிலையில் குற்றத்தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாகவும், மெரினா  கடற்கரையில் மக்கள் தண்ணீருக்குள்செல்வதைத் தடுக்கவும், கலங்கரை விளக்கம்  முதல் எம்ஜிஆர் நினைவிடம் வரை ஆளில்லா விமானங்களை அனுப்பும் பணியை மாநகர  போலீஸார் தொடங்கியுள்ளனர்.

கடந்த ஒரு வாரமாக காலை மற்றும் மாலை நேரங்களில் இந்த ஆளில்லா விமானங்களை பயன்படுத்துகிறோம். ஓரிரு நாட்களாக மழை பெய்ததால், தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. குற்றங்கள் மற்றும் குற்றவாளிகள் மெரினா கடற்கரையில் தஞ்சம் அடைவதைத் தடுக்கும் எங்கள் முயற்சிகளின் ஒரு பகுதி இது. காலை மற்றும் மாலை நேரங்களில் மக்கள் தண்ணீர் பகுதிக்குள் நுழைவதை தடுக்க ட்ரோன்கள் பயன்படுத்தப்படுகின்றன.

காமராஜர் சாலை மற்றும் மெரினா சர்வீஸ் சாலையில் காலை மற்றும் மாலை வேளைகளில் 8 ரோந்துக் குழுக்கள் இரண்டு ஷிப்டுகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: