டெல்லி :டிவிட்டர் தளத்தில் இருந்து சர்ச்சைக்குரிய ‘காளி’ போஸ்டர் நீக்கப்பட்டது.தமிழகத்தை சேர்ந்த பெண் இயக்குனர் லீனா மணிமேகலை தனது சமீபத்திய ஆவணப் படமான ‘காளி’ போஸ்டரால் சர்ச்சை எழுந்துள்ளது. கனடாவில் நடைபெற்ற ‘அண்டர் தி டெண்ட்’ என்ற திட்டத்தின் கீழ் இப்படத்தின் போஸ்டர் திரையிடப்பட்டது. ர்ச்சைக்குரிய இந்த படத்தின் போஸ்டர் டிவிட்டரில் டிரெண்டானது. அதில் ‘காளி’ வேடம் அணிந்த பெண், புகைப்பிடித்துக் கொண்டு, ஓரினச் சேர்க்கையாளர்களின் கொடியை கையில் பிடித்திருக்கும் காட்சி இடம் பெற்றிருந்தது. இது தொடர்பாக லீனா மணிமேகலை மீது டெல்லி, உத்தரபிரதேச போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.