பணியின்போது மின்சாரம் பாய்ந்து தூய்மை பணியாளர் பலி

சென்னை: பெரும்பாக்கத்தை சேர்ந்தவர் சேகர் (50). இவர் சென்னை மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், நேற்று காலை 9 மணியளவில் வேளச்சேரி வெங்கடேஸ்வரா நகர் 3வது பிரதான சாலை சந்திப்பில் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, பூமிக்கு அடியில் புதைக்கப்பட்டிருந்த மின் கேபிளில் ஏற்பட்ட மின் கசிவால் மின்சாரம் பாய்ந்து மயங்கி கிடந்தார். அருகில்,  இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். தகவலறிந்த வேளச்சேரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சேகர் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

Related Stories: