ரேஷன் பணியாளர்களுக்கு சிறப்பு ஊதிய உயர்வு பரிசீலிக்க 7 பேர் குழு அமைப்பு

சென்னை: ரேஷன் கடை பணியாளர்களுக்கு சிறப்பு ஊதிய உயர்வு குறித்து பரிசீலிக்க 7 பேர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கூட்டுறவு துறை பதிவாளர் வெளியிட்டுள்ள அறிக்கை: கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்படும் நியாயவிலை கடை பணியாளர்களின் கோரிக்கைகளான நியாயவிலை கடை பணியாளர்களுக்கு தேர்வுநிலை, சிறப்பு நிலை, சிறப்பு ஊதிய உயர்வு வழங்குவதற்கு முரண்பாடுகள் ஏதுமில்லாத தீர்வுகளை பரிசீலித்து பரிந்துரைக்க 7 அலுவலர்களை கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி தலைவராக தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு இணையம், கூடுதல் பதிவாளர், மேலாண்மை இயக்குனர் பாலமுருகன், உறுப்பினர்களாக தர்மபுரி மண்டலம், கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர், விருதுநகர் மண்டலம், கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர், சென்னை, பதிவாளர் அலுவலகம், கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர், பொள்ளாச்சி சரகம், கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர், திண்டுக்கல் சரகம், கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர் ஆகிய 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.  இந்த குழு பரிந்துரையை வரும் 31க்குள் அளிக்க வேண்டும்.

Related Stories: