அண்ணாமலை உருண்டு புரண்டாலும் பாஜ மீதான மக்கள் கோபம் குறையாது: கே.எஸ்.அழகிரி அறிக்கை

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடத்த பாஜவுக்கு என்ன தகுதி இருக்கிறது என்று கேள்வி எழுப்பியுள்ள கே.எஸ்.அழகிரி, உருண்டு புரண்டு அண்ணாமலை வந்தாலும் பாஜ மீதான மக்கள் கோபம் கடுகளவும் குறையாது என்று கூறியுள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:நேற்று நடைபெற்ற பாஜ போராட்டத்தில் 2 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு தருவதாக தி.மு.க. கூறி 15 மாதங்களில் எந்த வேலை வாய்ப்பையும் ஏற்படுத்தவில்லை என்று முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்து காழ்ப்புணர்ச்சியோடு அண்ணாமலை பேசியிருக்கிறார்.

ஆனால், ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு வழங்குவேன் என்று பிரதமர் மோடி வாக்குறுதி வழங்கினார். ஆனால், வேலையில்லா திண்டாட்டம் தற்போது தலைவிரித்தாடி வருகிறது. திமுக நிறைவேற்றாத கோரிக்கைகளுக்காக கன்னியாகுமரியிலிருந்து கோபாலபுரத்திற்கு பாத யாத்திரை நடத்தப் போவதாக அண்ணாமலை கூறுகிறார். அண்ணாமலை பாத யாத்திரை நடத்தினாலோ, அல்லது கன்னியாகுமரியிலிருந்து உருண்டு, உருண்டு கோபாலபுரம் வந்தாலும் தமிழகத்தில் பாஜ மீது மக்களுக்கு இருக்கிற வெறுப்பு கடுகளவும் குறையாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: