நுபுருக்கு கொலை மிரட்டல்: அஜ்மீர் தர்கா நிர்வாகி கைது

அஜ்மீர்: சர்ச்சை கருத்தை கூறியதால் சஸ்பெண்ட் செய்யப்பட்ட பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மாவுக்கு கொலை மிரட்டல் விடுத்த புகாரின் அடிப்படையில், ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் ஷெரீப் தர்காவைச் சேர்ந்த காதிம் சல்மான் சிஷ்டி என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். இதுகுறித்து கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு விகாஸ் சங்வான் கூறுகையில், ‘நுபுர் சர்மாவின் தலையை துண்டிப்பவர்களுக்கு, தனது வீட்டையும், பணத்தையும் கொடுப்பதாக சல்மான் சிஷ்டி என்பவர் சமூக வலைதளத்தில் வீடியோவாக பதிவிட்டிருந்தார்.

இந்த வீடியோ வைரலானதை அடுத்து, நேற்றிரவு சல்மான் சிஷ்டியை கைது செய்து விசாரித்து வருகிறோம். இவர் மீது ஏற்கனவே 15 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன’ என்றார். ஏற்கனவே கடந்த ஜூன் 17ம் தேதி அஜ்மீர் பகுதியில் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த 4 நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். கடந்த ஜூன் 28ம் தேதி உதய்பூரில் தையல்காரர் கன்னையா லால் கொலை செய்யப்பட்ட பின்னர், அங்கு தொடர்ந்து பதற்றம் நிலவி வரும் நிலையில் சல்மான் சிஷ்டி உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: