ஆகஸ்ட் 25 - 31 வரை டெட் தேர்வு முதல் தாள்

சென்னை: ஆசிரியர் தகுதித் தேர்வுகளுக்கான தாள் I வரும் ஆகஸ்ட் 25 முதல் 31ம் தேதி வரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு ஆசிரியர் தகுதி வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் I  மற்றும் தாள் II 2022ம் ஆண்டிற்கான அறிவிக்கை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளம் வாயிலாக கடந்த மார்ச் 7ம் தேதி வெளியிடப்பட்டது. விண்ணப்பதாரர்கள் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க காலஅவகாசம் கடந்த ஏப்ரல் 26ம் தேதி வரை வழங்கப்பட்டது. மேலும் ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் Iக்கு 2,30,878 பேரும், தாள் IIக்கு 4,01,886 பேர் என மொத்தம் 6,32,764 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

விண்ணப்பதாரர்களின் கோரிக்கையை ஏற்று ஆசிரியர்  தகுதித் தேர்வு I மற்றும் தாள்  II க்கு விண்ணப்பித்தவர்கள் தங்களின் விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய விரும்பினால் வரும் 11ம் தேதி முதல் 16ம் ேததி வரை திருத்தம் செய்ய ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தகுதித் தேர்வுகளுக்கான தாள் I வரும் ஆகஸ்ட் 25 முதல் 31ம் வரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தேர்வுக்கான  அட்டவணை, அனுமதிசீட்டு போன்றவை ஆகஸ்ட் 2 வாரத்தில் அறிவிக்கப்படும்.

Related Stories: