திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் திருக்கோயிலில் நடராஜருக்கு ஆனி திருமஞ்சனம்: பக்தர்கள் சாமி தரிசனம்

திருக்கழுக்குன்றம்: வேதகிரீஸ்வரர் திருக்கோயிலில் நடராஜருக்கு ஆனி திருமஞ்சனம் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீர்த்தவாரி நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். திருக்கழுக்குன்றத்தில் வேதகிரீஸ்வரர் கோயில் உலகப் பிரசித்திப்பெற்ற சிவஸ்தலம். இக்கோயிலில் உள்ள நடராஜர் சாமிக்கு ஆண்டுதோறும் ஆனி மாதத்தில், ஆனி மாத திருமஞ்சனம் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இதனை தொடர்ந்து, நடராஜர் சாமிக்கு நேற்று காலை சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகளும் நடந்தது. கோயில் வளாகத்தில் அமைந்துள்ள ரிஷப தீர்த்த குளத்தில் உற்சவ மூர்த்தி எழுந்தருளி தீர்த்தவாரியில் ஈடுப்பட்ட வைபவமும் நடந்தது. தொடர்ந்து, மாலை புஷ்ப அலங்காரத்தில் நடராஜர் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதனைக்காண, திருக்கழுக்குன்றம் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர்.

Related Stories: