தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் 2021 ஸ்டார்ட்அப் ரேங்க்கில் முன்னணி: முதல்வர் பாராட்டு

சென்னை:  முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள பதிவு: தமிழ்நாடு அரசின் தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, மாநிலங்களின் ஸ்டார்ட்அப் ரேங்கிக் 2021ல் முன்னணி இடம் பெற்றமைக்காக எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். மாநிலத்தின் ஸ்டார்ட்அப் சாம்பியன் விருது வழங்கப்பட்டமைக்காக எஸ்.நாகராஜன் மற்றும் ஆர்.வி. சஜீவனாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.  மாநிலத்தில் ஸ்டார்ட்அப் சூழலை மேம்படுத்துவதற்கு இந்த அரசு எடுத்துவரும் பல புதுமையான நடவடிக்கைகளினால், எதிர்வரும் ஆண்டுகளில் நமது மாநிலம் சிறந்த செயல்திறன் கொண்ட தரவரிசையில் மேலும் உயர முடியும் என நம்புகிறேன். டான்சிம் குழு வெற்றி பெற வாழ்த்துகிறேன். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Related Stories: