அக்னிபாதை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

செங்கல்பட்டு: செங்கல்பட்டில், அக்னிபாதை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒன்றிய அரசின் அக்னிபாதை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, உடல் தகுதி தேர்வில் வெற்றி பெற்று, எழுத்து தேர்வுக்காக காத்திருக்கும் 3 லட்சம் இளைஞர்களுக்கு உடனடியாக தேர்வு நடத்த வலியுறுத்தியும், இந்திய கம்யூனிஸ்ட்  மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளின் இளைஞர்கள், மாணவர்கள் அமைப்பு சார்பில், செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதற்கு இளைஞர் பெருமன்றத்தின் மாவட்ட தலைவர் சேகுவேரா தாஸ் தலைமை தாங்கினார்.

இதில்,  இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநில இணை செயலாளர் நந்தன், மாவட்ட செயலாளர் க.புருசோத்தமன், மாவட்ட தலைவர் ஜீவானந்தம், இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் மு.தமிழ்பாரதி, இளைஞர் பெருமன்றத்தின் மாநில செயலாளர் க.பாரதி, மாவட்ட செயலாளர் பார்த்திபன், மாணவர் பெருமன்றத்தின் மாவட்ட செயலாளர் வெங்கடேசன், புரட்சிகர இளைஞர் கழகத்தின் மாவட்ட தலைவர் ராஜேஷ்குமார், புரட்சிகர மாணவர் கழகத்தின் மாநில தலைவர் பால அமுதன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு பேசினர்.

Related Stories: