தற்காலிக ஆசிரியர் பணிக்கு இன்று முதல் விண்ணப்பம்: தகுதியுள்ளோர் விண்ணப்பிக்கலாம்

சென்னை: தற்காலிக  ஆசிரியர் பணிக்கு இன்று முதல் 6ம் தேதி வரை அந்தந்த மாவட்ட கல்வி அதிகாரிகள் அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம்  என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்பும் வகையில் அந்த பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர்களை நியமித்துக் கொள்ளலாம் என்று  அரசு அறிவித்தது. இதில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக, தற்காலிக ஆசிரியர் நியமனத்துக்கான திருத்திய வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக் கல்வித்துறை 2ம் தேதி வெளியிட்டது. அதில், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும், இல்லம் தேடிக் கல்வியில் உள்ள தன்னார்வலர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும், காலிப் பணியிடங்கள் உள்ள பள்ளிகளின் விவரங்கள் தகவல் பலகையில் வெளியிட வேண்டும், 4ம் தேதி முதல் 6ம் தேதி வரை தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்க வேண்டும் மற்றும் விதிகள் மற்றும் வழிகாட்டுதல் தெரிவிக்கப்பட்டன. இதையடுத்து, விண்ணப்பிக்கும் நபர்களுக்கான மாதிரி விண்ணப்ப படிவங்கள், அடங்கிய விவரங்கள் நேற்று வெளியிடப்பட்டன. இதன் தொடர்ச்சியாக தகுதியுள்ள நபர்கள் இன்று முதல் 6ம் தேதி வரை விண்ணப்பிக்க வேண்டும்.

Related Stories: