செகந்திராபாத்-டெல்லி எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ

திருமலை: செகந்திராபாத்தில் இருந்து டெல்லி செல்லும் தட்சினா எக்ஸ்பிரஸ் ரயில், நேற்று முன்தினம் நள்ளிரவு தெலங்கானா மாநிலம், யாதாத்ரி புவனகிரி அருகே உள்ள பகிடிபள்ளி ரயில் அடைந்த போது, ​​கடைசி பெட்டி திடீரென தீப்பிடித்தது எரிந்தது. இதையடுத்து, ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டது. இதனால், பயணிகள் அனைவரும் அலறி அடித்துகொண்டு கீழே இறங்கி ஓட்டம் பிடித்தனர். தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள், தீயை கட்டுப்படுத்தினர். இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. பின்னர், தீப்பிடித்தது சரக்கு பெட்டியில் தான் என்பதை அறிந்ததும், இதுகுறித்து ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் அதிகாரிகள் விரைந்து வந்து உடனடியாக அந்தப் பெட்டியை மட்டும் தனியாக கழற்றி விட்டு பயணிகள் பெட்டிகளுடன் ரயிலை டெல்லிக்கு அனுப்பி வைத்தனர்.

Related Stories: