எஸ்.டி.பி.ஐ.கட்சி 2022ம் ஆண்டின் விருதுகள் வழங்கும் விழா: வைகோ உள்ளிட்ட சிறந்த ஆளுமைகளுக்கு விருது

சென்னை: எஸ்.டி.பி.ஐ.கட்சியின் சார்பில் 2022ம் ஆண்டுக்கான சிறந்த  ஆளுமைகளுக்கு விருதுகள் வழங்கி கவுரவிக்கும் விழா சென்னை தி.நகரில் நேற்று  நடந்தது. விழாவுக்கு எஸ்.டி.பி.ஐ.கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக் தலைமை  தாங்கினார். மாநில துணைத் தலைவர் அப்துல் ஹமீது, பொதுச்செயலாளர்கள் நிஜாம்   முகைதீன், அச.உமர் ஃபாரூக், அகில இந்திய செயற்குழு உறுப்பினர் முகமது   பாரூக், மாநில பொருளாளர் அமீர் ஹம்சா, மாநில செயலாளர்கள் ரத்தினம்,   ஏ.கே.கரீம், மாநில செயற்குழு உறுப்பினர்கள் பஷீர் சுல்தான், வழ.ராஜா   முகமது, கமால் பாஷா, முகமது ரஷீத், வழ.சபியா, சபீக் அகமது, முஜிபுர்   ரஹ்மான், டாக்டர் ஜமிலூன்னிஷா, வர்த்தகர் அணி மாநில தலைவர் கிண்டி அன்சாரி,   மாவட்ட தலைவர்கள் முகமது சலீம், முகமது பிலால், புஸ்பராஜ், சீனி முகமது,   முகமது இஸ்மாயில், முகமது உசேன், ஆர்.எம்.கே.மாலிக், ஜூபைர், ஜாஃபர்,   செய்யது அகமது, சலீம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில்  கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் விருது மதிமுக பொதுச்செயலாளர் வைகோ  எம்பிக்கு வழங்கப்பட்டது. டாக்டர் அம்பேத்கர் விருது- சென்னை  உயர்நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் என்.ஜி.ஆர்.பிரசாத். தந்தை பெரியார்  விருது- மனித உரிமைச் செயற்பாட்டாளர் பேராசிரியர் பிரபா கல்வி மணி. சிறந்த  கல்விச் சேவைக்காக பெருந்தலைவர் காமராஜர் விருது சதக்கத்துல்லா அப்பா  கல்லூரிக்கு வழங்கப்பட்டது. விருதை கல்லூரி தாளாளரும் செய்யது குழுமங்களின்  தலைவருமான அல்ஹாஜ் பத்ஹூர் ரப்பானி சாஹிப் பெற்றுகொண்டார்.

மேலும்,  கவிக்கோ விருது-சென்னை அரசு அருங்காட்சியகத்தின் முன்னாள் இயக்குநர்  டாக்டர் ராஜா முகமது, பழனிபாபா விருது- விசிக துணைப் பொதுச்செயலாளர் வன்னி  அரசு. இயற்கை விஞ்ஞானி ஐயா நம்மாழ்வார் விருது- சேலம்-சென்னை எட்டுவழிச்  சாலை எதிர்ப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழனியப்பன். சிறந்த தொண்டு  மற்றும் சேவைக்கான அன்னை தெரசா விருது- அகில இந்திய அரவாணிகள்  உரிமைகள்& மறுவாழ்வு மையத்தின் இயக்குநர் டாக்டர்.மோகனா அம்மாள்  நாயக்கும் வழங்கப்பட்டது. விழாவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில  செயலாளர்  இரா.முத்தரசன், தமிழ்நாடு  வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர்  விக்கிரமராஜா, பாப்புலர் ப்ரண்ட்  மாநில தலைவர் முகமது சேக் அன்சாரி  ஆகியோர் கலந்து கொண்டு  சிறப்புரையாற்றினர். விழாவில் எஸ்.டி.பி.ஐ. கட்சி  நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும்  பல்வேறு அமைப்புகள் மற்றும் அரசியல்  கட்சிகளின் நிர்வாகிகள், பொதுமக்கள்  உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்  கலந்துகொண்டனர்.

Related Stories: