ராகுல் காந்தியை தொடர்புபடுத்தி பாஜ போலி வீடியோ: காங்கிரஸ் எச்சரிக்கை

புதுடெல்லி: ராகுல் காந்தி குறித்து போலி வீடியோ வெளியிட்ட முன்னாள் ஒன்றிய அமைச்சர் ராஜ்யவர்த்தன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று காங்கிரஸ் கோரி உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ்,பாஜ தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கேரளாவில் தனது அலுவலகம் தாக்கப்பட்டது குறித்து பேசிய வீடியோ, உதய்ப்பூர் டெய்லர் படுகொலையுடன் சம்பந்தப்படுத்தப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஒன்றிய அமைச்சசர் ராஜ்யவர்த்தன் சிங் ரத்தோர், சுப்ராத் பதக் எம்பி. பாஜ சட்டமன்ற உறுப்பினர் கமலேஷ் சைனி ஆகியோர், இந்த வீடியோவின் உண்மைத்தன்மையை பற்றி சிந்திக்காமல் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். இந்த வீடியோ போலியானது என்று காங்கிரஸ் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டது. ரத்தோர் முதலில் வீடியோவை நீக்கிவிட்டு மீண்டும் அதை பதிவேற்றம் செய்துள்ளார். இதற்கு பாஜ சார்பில் இன்றைக்குள் (நேற்று) மன்னிப்பு கேட்கவில்லை என்றால், சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

Related Stories: