சொத்துவரி பொது சீராய்வின்படி நிர்ணயிக்கப்பட்டுள்ள சொத்துவரியினை சொத்து உரிமையாளர்கள் செலுத்த சென்னை மாநகராட்சி உத்தரவு

சென்னை: சென்னை மாநகராட்சியால் சொத்துவரி பொது சீராய்வின்படி, நிர்ணயிக்கப்பட்டுள்ள சொத்துவரியினை சொத்து உரிமையாளர்கள் செலுத்தி, பெருநகர சென்னை மாநகராட்சியின் சேவைப்பணிகளுக்கு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

அரசால் வெளியிடப்பட்ட அரசாணை எண்-53,  நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, நாள்.30.03.2022ன்படி, பெருநகர சென்னை மாநகராட்சியின், முந்தைய சென்னை மாநகராட்சி/இணைக்கப்பட்ட உள்ளாட்சி பகுதிகளுக்கென பரிந்துரைப்பட்டுள்ள உயர்வு காரணிகளின் அடிப்படையில் சொத்துவரி பொது சீராய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், இணைக்கப்பட்ட உள்ளாட்சி பகுதிகளுக்கென பரிந்துரைக்கப்பட்டுள்ள உயர்வு காரணிகளின் அடிப்படையில் சொத்துவரி பொது சீராய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.  மேலும், இணைக்கப்பட்ட உள்ளாட்சி பகுதிகளில், ஏற்கனவே சொத்துவரி உயர்வாக உள்ள பகுதிகள் என கண்டறியப்பட்டவைகளுக்கு, அவற்றிற்கு அருகாமையில் உள்ள முள்ள முந்தைய மாநகராட்சி பகுதிகளைவிட, சொத்துவரி அடிப்படை தெரு கட்டணம் அதிகமாக இல்லாதவாறு நிர்ணயம் செய்ய, மன்றத்தின் அனுமதி பெறப்பட்டு, சொத்துவரி சீராய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    

சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிளில் அமைந்துள்ள சொத்துவரி மதிப்பீடுகளுக்கு, மேற்குறிப்பிட்டவாறு சொத்துவரி சீராய்வு மேற்கொள்ளப்பட்டு, பொதுசீராய்வு அறிவிப்புகள் தபால் துறை மூலமாக சொத்து உரிமையாளர்களின் முகவரிக்கு சார்வு செய்யப்பட்டு வருகிறது.  27.06.2022 தேதி வரை ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட சொத்து உரிமையாளர்களுக்கு பொது சீராய்வு அறிவிப்புகள் சார்வு செய்யப்பட்டுள்ளது.

    

சொத்துவரி பொது சீராய்வு அறிவிப்புகளில், முந்தைய சொத்துவரி மற்றும் பொது சீராய்வின்படி நிர்ணயம் செய்யப்பட்டுள்ள சொத்துவரி ஆகிய விவரங்கள் அளிக்கப்ட்டுள்ளது.  தற்போது, பொது சீராய்வின்படி சொத்துக்களுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள சொத்துவரியினை சொத்து உரிமையாளர்கள் எளிதாக செலுத்தும் வகையில், சீராய்வு அறிவிப்புகளில்  tiny.url மற்றும் QR Code ஆகிய வழிமுறைகள் மற்றும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.  

    

மேலும், கீழ்கண்டுள்ள  வழிகளிலும் சொத்துவரியினை எளிதாக செலுத்தலாம்.

*வருவாய் அலுவலர், சென்னை மாநகராட்சி அவர்களின் பெயரில் காசோலைகள் மற்றும் வரைவோலைகள், கடன்/ பற்று அட்டை மூலமாக, பெருநகர சென்னை மாநகராட்சியின் வரி வசூலிப்பவர்களிடம் செலுத்தி, செலுத்தப்பட்டதற்கான வரிசீட்டினை (Receipt) பெற்றுக் கொள்ளலாம்.

*பெருநகர சென்னை மாநகராட்சியின் வலைத்தளம் (www.chennaicorporation.gov.in ) மூலமாக எவ்வித பரிமாற்ற கட்டணமில்லாமல் (Nil Transaction fee) சொத்துவரி செலுத்தலாம்.

*தேர்ந்தெடுக்கப்பட்ட  வங்கிகளின் மூலம் நேரடியாக பணமாகவும் சொத்துவரி செலுத்தலாம்.

*‘நம்ம சென்னை’ மற்றும் ‘பே.டி.எம்’. முதலிய கைப்பேசி செயலி மூலமாகவும் சொத்துவரி செலுத்தலாம்.

*BBPS (Bharat Bill Payment System)  மூலமாகவும் சொத்துவரி செலுத்தலாம் மண்டல/வார்டு அலுவலகங்களின் அமைந்துள்ள இ.சேவை மையங்களிலும் சொத்துவரி செலுத்தலாம்.

மேலும், பெருநகர சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட சொத்து உரிமையாளர்கள் தற்போது, சொத்துவரியினை இணைதள மூலமாக (online) செலுத்தும் பட்சத்தில், குறிப்பிட்ட வங்கிக்ள் நிபந்தனைகளுக்குட்பட்டு, பரிசு கூப்பன்கள் (Gift Voucher),  குறிப்பிட்ட சதவீதம் பணச்சலுகை (Cashback offer) மற்றும் திரைப்பட நுழைவு சீட்டு (Movie Tickets) போன்ற சலுகைகள் வழங்க விருப்பம் தெரிவித்துள்ளது.

எனவே, சென்னை மாநகராட்சியால் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள சொத்துவரி பொது சீராய்வின்படி, நிர்ணயிக்கப்பட்டுள்ள சொத்துவரியினை சொத்து உரிமையாளர்கள் மேற்படி வழிமுறைகளில் செலுத்தி, பெருநகர சென்னை மாநகராட்சியின் சேவைப்பணிகளுக்கு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Related Stories: