பெரியபாளையத்தில் இடியுடன் பலத்த மழை: தண்ணீர் செல்ல வசதியில்லாததால் மக்கள் அவதி

ஊத்துக்கோட்டை: பெரியபாளையத்தில் நேற்றிரவு பெய்த பலத்த மழையால் தண்ணீர் செல்ல வடிகால் வசதி அமைத்து தர பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பெரியபாளையத்தில் சுமார் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். பெரியபாளையத்தில் பழைய காவல் நிலையம் எதிரில் உள்ள சாலை வழியாகதான் ஆரணி, கும்மிடிப்பூண்டி, திருவள்ளூர், ஊத்துக்கோட்டை, ஆவடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு தினமும் வாகனங்கள் சென்று வருகிறது. மேலும் இப்பகுதி மக்கள் சாலை கடந்துதான் அத்தியாவசிய பொருட்கள் வாங்க செல்வார்கள். இந்நிலையில் நேற்றிரவு பெய்த பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் சாலையில் மழைநீர் தேங்கி குளம் போல் காட்சியளித்தது. இதனால் இப்பகுதி மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.

எனவே இப்பகுதியில் மழைநீர் செல்ல வடிகால்வாய் அமைத்து தரவேண்டும் என சம்பந்தப்பட்ட துறையினருக்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தேங்கும் மழைநீரால் கொசுக்கள் உற்பத்தியாகி காய்ச்சல் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. எனவே சாலையில் தேங்கிய மழைநீரை அகற்றி மழை காலம் தொடங்கும் முன்பு வடிகால் வசதி அமைத்து தர வேண்டும் என வாகன ஓட்டிகளும் அப்பகுதி மக்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: