ஆதம்பாக்கத்தில் நாளை 1500 கழக முன்னோடிகளுக்கு பொற்கிழி; உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ வழங்குகிறார்

ஆலந்தூர்: கலைஞர் கருணாநிதி பிறந்த தினத்தை முன்னிட்டு, 1500 கழக முன்னோடிகளுக்கு பொற்கிழிகளை உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ வழங்குகிறார். காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக சார்பில், கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாள், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசின் ஓராண்டு சாதனை விளக்க கூட்டம் மற்றும் 1500 கழக முன்னோடிகளுக்கு தலா ரூ. 10 ஆயிரம் அடங்கிய பொற்கிழி வழங்கும் விழா, ஆதம்பாக்கம், கேஆர்ஜே கார்டனில் நாளை (2ம் தேதி) மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது.

மாவட்ட செயலாளரும் அமைச்சருமான தா.மோ.அன்பரசன் தலைமை தாங்குகிறார். ஆலந்தூர் பகுதி செயலாளர்கள் என்.சந்திரன், பி.குணாளன், மாவட்ட அவைத் தலைவர் த.துரைசாமி, மாவட்ட துணை செயலாளர்கள் வெ.விஸ்வநாதன், அன்புசெழியன், கலைவாணி காமராஜ் முன்னிலை வகிக்கின்றனர். விழாவில் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று, 1500 கழக முன்னோடிகளுக்கு பொற்கிழி, நினைவு பரிசு வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.

இதில் காஞ்சிபுரம் எம்பி ஜி.செல்வம், தீர்மான குழு உறுப்பினர் மீ.அ.வைதியலிங்கம், எம்எல்ஏக்கள் எஸ்.ஆர்.ராஜா, இ.கருணாநிதி, வரலட்சுமி மதுசூதனன், அரவிந்த் ரமேஷ், காஞ்சி மாவட்ட ஊராட்சி தலைவர் படப்பை மனோகரன், தாம்பரம் மேயர் வசந்தகுமாரி, துணைமேயர் கோ.காமராஜ், செங்கல்பட்டு மாவட்ட ஊராட்சி தலைவர் செம்பருத்தி துர்கேஷ், மாவட்ட பொருளாளர்கள் எஸ்.சேகர், எம்எஸ்கே.இப்ராகிம், ஒன்றிய-நகர செயலாளர்கள் தமிழ்மணி, இதயவர்மன், வே.கருணாநிதி, டி.பாபு, நரேந்திரன், கோபால், திருநீர்மலை ஜெயக்குமார், மாவட்ட இளைஞரணி செயலாளர் எம்கேடி. கார்த்திக், மாவட்ட மாணவரணி செயலாளர் எஸ்.பிரபு ஆகியோர் பங்கேற்கின்றனர்.

விழாவில், காஞ்சி வடக்கு மாவட்டத்துக்குட்பட்ட அனைத்து நிர்வாகிகள், அந்தந்த அணிகளின் நிர்வாகிகள் உள்பட அனைவரும் தவறாமல் பங்கேற்று சிறப்பிக்க வேண்டும் என மாவட்ட செயலாளரும் அமைச்சருமான தா.மோ.அன்பரசன் அழைப்பு விடுத்துள்ளார்.

Related Stories: