கீரப்பாக்கம் ஊராட்சியில் பள்ளமான மைதானத்தை சீரமைக்க வலியுறுத்தல்

கூடுவாஞ்சேரி: ஊரப்பாக்கம் ஊராட்சியில் இளைஞர்களின் உடல்நலனுக்கு பயன்பட வேண்டிய ஒரு விளையாட்டு மைதானம் பெரும்பள்ளமாக காட்சியளிக்கிறது. வரும் மழைக் காலத்துக்குள் மைதானத்தில் மண்கொட்டி சீரமைக்க அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர். செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கீரப்பாக்கம் ஊராட்சியில் கீரப்பாக்கம், முருகமங்கலம், அருங்கால், விநாயகபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கினற்னர்.

இங்கு 4வது வார்டு, விநாயகபுரத்தில் மலையை ஒட்டி ஒரு விளையாட்டு மைதானம் நடைபயிற்சி மற்றும் இளைஞர்களின் உடல்திறனை வளர்க்கும் வகையில் பல்வேறு விளையாட்டு போட்டிகளுக்கு பயன்பட்டு வந்தது. தற்போது இந்த விளையாட்டு மைதானம் முறையான பராமரிப்பின்றி பெரும் பள்ளமாக காட்சியளிக்கிறது. மழைக் காலங்களின்போது இந்த விளையாட்டு மைதானம் பள்ளமாக இருப்பதால் மழைநீர் நிரம்பி, கடல் போல் காட்சியளிக்கிறது.

இதனால் அங்கு பல்வேறு இளைஞர்கள் உடல்திறனை அதிகரிக்கும் விளையாட்டு பயிற்சிகளை மேற்கொள்ள முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். அங்கு மீன்பிடி தொழில் அமோகமாக நடந்து வருகிறது. இதில் பல்வேறு சிறுவர்கள் நீருக்குள் தவறி விழுந்து உயிரிழக்கும் அபாயநிலை உள்ளது. எனவே, வரும் மழைக் காலத்துக்குள் இங்குள்ள மலையைக் குடைந்து மண் எடுத்து, பெரும்பள்ளமாக காட்சியளிக்கும் விளையாட்டு மைதானத்தில் கொட்டி சமன்படுத்தவும் இப்பகுதி இளைஞர்களின் உடல்திறனை பேணி காக்கவும் மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.

Related Stories: