ஆஸ்கர் அகாடமி அமைப்பில் சேர சூர்யா, கஜோலுக்கு அழைப்பு

சென்னை: ஆஸ்கர் அகாடமி அமைப் பில் உறுப்பினர் ஆக நடிகர் சூர்யா, நடிகை கஜோல் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.2022ம் ஆண்டுக்கான புதிய உறுப்பினர்களை சேர்ப்பது தொடர்பான பட்டி யலை ஆஸ்கர் வெளியிட்டு இருக்கிறது. அதன்படி, அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அன்ட் சயின்ஸ் நிறுவனத்தில் சேர, 397 பிரபல கலைஞர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. தொழில்ரீதியான தகுதி மற்றும் அர்ப்பணிப்பு போன்ற தகுதிகளைக் கொண்டு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு உறுப்பினர்களின் அழைப்பாளர்கள் பட்டியலில், ஆஸ்கர் விருது வென்ற 15 பேர் உள்பட ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர்கள் 71 பேர் இருக்கின்றனர்.

இதில் நடிகர்கள் பட்டியலில் சூர்யா இடம்பெற்றுள்ளார். ஆஸ்கர் அகாடமி அமைப்பின் உறுப்பினராக சேர்வதற்கு சூர்யாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. முன்னதாக, ஆஸ்கரில் சிறந்த வெளிநாட்டு படங்களுக்கான தகுதி பட்டியலில், 276 படங்களில் சூர்யா நடித்த `ஜெய்பீம்’ படமும் இணைந்து போட்டியிட் டது. அதுபோல், பாலிவுட் நடிகை கஜோலுக்கும் ஆஸ்கர் அகாடமி அமைப்பில் உறுப்பினராக சேர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நடிகர்கள், இயக்குனர்கள், ஆடை வடிவமைப்பாளர்கள் உள்பட பல்வேறு துறைகளில் இருந்து தேர்வு நடந்துள்ளது. அதில் இந்தியாவில் இருந்து சூர்யா, கஜோல் ஆஸ்கர் குழுவில் உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.   ஒட்டுமொத்தமாக  ஆஸ்கர் உறுப்பினர் குழுவில் உலகம் முழுவதும் இருந்து 4,000க்கும் அதிகமான உறுப்பினர்கள் இருக்கின்றனர். தமிழ் படவுலகில் இருந்து இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஏற்கனவே ஆஸ்கர் தேர்வு குழு உறுப்பினராக உள்ளார். புதிய உறுப்பினர்கள், ஆஸ்கர் பட்டியலுக்கான படங்களை தேர்வு செய்ய வாக்களிக்கும் உரிமை பெறுவார்கள்.

Related Stories: