ஆகஸ்ட் 6ம் தேதி குடியரசு துணைத் தலைவர் தேர்தல் நடைபெறும்: இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு

டெல்லி: ஆகஸ்ட் 6ம் தேதி குடியரசு துணைத் தலைவர் தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. துணை குடியரசு தலைவராக உள்ள வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் ஆகஸ்ட் 10ம் தேதி நிறைவடைகிறது. ஏற்கனவே குடியரசு தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் அடுத்த மாதம் 18ம் தேதி நடைபெற்று 23ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இந்நிலையில் நாட்டின் 16வது துணை குடியரசு தலைவரை தேர்வு செய்வதற்கான அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் அறிக்கையாக வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்; ஆகஸ்ட் 6ம் தேதி குடியரசு துணைத் தலைவர் தேர்தல் நடைபெறும். ஜூலை 5ம் தேதி குடியரசு துணைத் தலைவர் தேர்தல் வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. ஜூலை 19ம் தேதி வேட்பு மனு தாக்களுக்கு கடைசி நாளாகும். வாக்குப்பதிவுக்கு நடைபெற்ற ஆக.6ம் தேதியே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இதில் 543 மக்களவை உறுப்பினர்கள், 233 மாநிலங்களவை உறுப்பினர்கள், 12 நியமன உறுப்பினர்கள் வாக்களிக்க உள்ளனர்.

Related Stories: