தமிழக முதல்வர் பங்கேற்கும் அரசு விழாக்களில் நிகழ்ச்சி தொகுப்பாளர் பணி : வெளியானது முக்கிய அறிவிப்பு!!

சென்னை: தமிழக முதல்வர் பங்கேற்கும் அரசு விழாக்களில் விழாவினை தொகுத்து வழங்க நிகழ்ச்சி தொகுப்பாளர் பணிக்கு நேர்காணல் மூலம் தகுதியுடைய நபரை தேர்ந்தெடுப்பது தொடர்பாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுகுறித்து செய்தி மக்கள் தொடர்பு மற்றும் அலுவலால் அரசுத் துணைச் செயலாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும்  அமைச்சர் பெருமக்கள் பங்கேற்கும் அரசு விழாக்களில் தொகுத்து வழங்க ஆர்வமும், விருப்பமுடைய நிகழ்ச்சி தொகுப்பளார்கள் செய்தி மக்கள் தொடர்பு துறை மூலம் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள்.

தங்கள் துறையில் பணியாற்றி வரும் தூயத் தமிழில்/ஆங்கிலத்தில் பேசக்கூடியவராகவும், நல்ல குரல் வளத்துடன் கூடிய ஆர்வமுடையோர் இயக்குநர், செய்தி மக்கள் தொடர்பு துறை, தலைமைச் செயலகம், சென்னை .9 என்ற முகவரியில் ஜுலை 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். நேர்காணல் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.மேற்கண்ட தகவலை அனைத்து பணியாளர்களும் தெரிந்து கொள்ளும் வகையில் தங்கள் அலுவலகத்தில் உள்ள அறிவிப்பு பலகையில் பார்வைக்காக வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என்று  அனைத்துத் துறை செயலாளர்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related Stories: