தமிழகம் முழுவதும் 32 டிஎஸ்பிக்களுக்கு கூடுதல் எஸ்பியாக பதவி உயர்வு; உள்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி உத்தரவு

சென்னை: தமிழகம் முழுவதும் 32 டிஎஸ்பிக்களுக்கு கூடுதல் எஸ்பியாக பதவி உயர்வு வழங்கி உள்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து உள்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி பிறப்பித்துள்ள உத்தரவு: சென்னை மாநகர பயிற்சி மற்றும் நவீனமயமாக்கல் பிரிவு உதவி கமிஷனராக இருந்த ஸ்டீபன் திருவண்ணாமலை மாவட்ட தலைமையிட கூடுதல் எஸ்பியாகவும், திருநெல்வேலி லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பியாக இருந்த மெசிலரின் எஸ்கோல் திருநெல்வேலி மாவட்ட தலைமையிட கூடுதல் எஸ்பியாகவும், சென்னை மாநகர விருகம்பாக்கம் உதவி கமிஷனராக இருந்த அகஸ்டின் பால் சுதாகர் சென்னை மாநகர மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு கூடுதல் எஸ்பியாகவும், சென்னை அரசு பிரஸ் டிஎஸ்பியாக இருந்த யாகூப் சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் கூதுல் பாதுகாப்பு அதிகாரியாகவும், சென்னை மாநகர பாதுகாப்பு பிரிவு உதவி கமிஷனராக இருந்த குமரேசன் சென்னை மாநகர வடக்கு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு கூடுதல் எஸ்பியாகவும்.

சென்னை க்யூ பிரிவு சிஐடி  தலைமையிட டிஎஸ்பியாக இருந்த சரவணன் சென்னை க்யூ பிரிவு சிஐடி கூடுதல் எஸ்பியாகவும், டிஜிபி அலுவலக தலைமை போலீஸ் படை டிஎஸ்பியாக இருந்த சோமசுந்தரம் விருதுநகர் மாவட்ட தலைமையிட கூடுதல் எஸ்பியாகவும், டிஜிபி அலுவலகம் தலைமை போலீஸ் படை டிஎஸ்பியாக இருந்த வேணுகோபால் நாகப்பட்டினம் மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு கூடுதல் எஸ்பியாகவும், சென்னை எஸ்பிசிஐடி டிஎஸ்பியாக இருந்த கோபால் சென்னை எஸ்பிசிஐடி தலைமையிட கூடுதல் எஸ்பியாகவும், சேலம் நீதித்துறை லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பியாக சந்திரசேகரன் காஞ்சிபுரம் மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு கூடுதல் எஸ்பியாகவும், தென்காசி மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றப்புலனாய்வு பிரிவு டிஎஸ்பியாக இருந்த சூர்யமூர்த்தி விருதுநகர் மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு கூடுதல் எஸ்பியாகவும்.

ராமநாதபுரம் போலீஸ் பயிற்சி மையம் டிஎஸ்பியாக இருந்த பிகாஷ் பாபு தூத்துக்குடி மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு கூடுதல் எஸ்பியாகவும், ஈரோடு சிறப்பு அதிவிரைவுப்படை டிஎஸ்பியாக இருந்த பன்பாலன் ஈரோடு சிறப்பு அதிவிரைப்படை கூடுதல் எஸ்பியாகவும், திருநெல்வேலி நகர மேலபாளையம் சரக உதவி கமாண்டன்மாக இருந்த பாலமுருகன் சென்னை சிலை திருட்டு தடுப்பு பிரிவு கூடுதல் எஸ்பியாகவும், விருதுநகர்  லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பியாக இருநத் ராமசந்திரன் திண்டுக்கல் மாவட்டம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு கூடுதல் எஸ்பியாகவும், ராமநாதபுரம் மாவட்டம் நில அபகரிப்பு சிறப்பு பிரிவு டிஎஸ்பியாக இருந்த சீனிவாசலு கடலூர் மாவட்டம் சைபர் க்ரைம் பிரிவு கூடுதல் எஸ்பியாகவும், சென்னை மாநகர குற்றப்பிரிவு உதவி கமிஷனராக இருந்த அண்ணாதுரை சென்னை மாநகர மேற்கு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு கூடுதல் எஸ்பியாகவும்.

சென்னை மாநகர மத்திய குற்றப்பிரிவில் இருந்த பிரபாகரன் சென்னை மாநகர மத்திய குற்றப்பிரிவு-1  கூடுதல் எஸ்பியாகவும், கோவை மாவட்ட மேட்டுப்பாளையம் டிஎஸ்பியாக இருந்த பாலமுருகன் ஈரோடு மாவட்ட தலைமையிட கூடுதல் எஸ்பியாகவும், திருச்சி நகரை சமூக நீதி மற்றும் மனித உரிமை கழக உதவி கமிஷனராக இருந்த விவேகனந்தன் தேனி மாவட்ட தலைமையிட கூடுதல் எஸ்பியாகவும், கோவை பொருளாதார குற்றப்பிரிவு டிஎஸ்பியாக இருந்த பால குமார் காஞ்சிபுரம் மாவட்டம் சைபர் க்ரைம் பிரிவு கூடுதல் எஸ்பியாகவும், கோவை நகர் நுண்ணறிவுப்பிரிவு உதவி கமிஷனராக இருந்த முருகவேல் கோவை நகர பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு கூடுதல் துணை கமிஷனராகவும் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

Related Stories: