எட்டயபுரத்தில் மாட்டு வண்டி போட்டி 2வது நாளாக சீறிப்பாய்ந்த காளைகள்

எட்டயபுரம் : எட்டயபுரத்தில் கலைஞரின் 99வது பிறந்தநாளை முன்னிட்டு மாபெரும் மாட்டு வண்டி போட்டி நேற்று முன்தினம் தொடங்கியது. முதலாவதாக பூஞ்சிட்டு மாட்டுவண்டி போட்டி நடந்தது. போட்டியில் 33 மாட்டு வண்டிகள் பங்கேற்றன.  இதில் பங்கேற்ற காளைகள் இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்தன. நேற்று 2வது நாளாக சின்னமாடு, பெரிய மாடு வண்டி போட்டி நடந்தது. இதில் 50க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகள் பங்கேற்றன. மார்க்கண்டேயன் எம்எல்ஏ போட்டியை தொடங்கி வைத்தார்.  தொடர்ந்து போட்டியில் வெற்றி பெற்ற மாட்டு வண்டி உரிமையாளர்களுக்கும், அதனை ஓட்டி வந்தவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் திமுக மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் உள்பட பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Related Stories: