புதிய தொழில் தொடங்கினார் ராஷ்மிகா

சென்னை: கன்னடத்தில் அறிமுகமான ராஷ்மிகா மந்தனா, பிறகு தெலுங்குக்கு சென்றார். இதையடுத்து தமிழில் கார்த்தி ஜோடியாக ‘சுல்தான்’ படத்தில் நடித்த அவர், தற்போது இந்தியில் அதிக கவனம் செலுத்துகிறார். சினிமா தவிர்த்து விளம்பர படங்களிலும் நடிக்கும் அவர், சில நிறுவனங்களின் விளம்பர தூதராகவும் இருக்கிறார். இந்நிலையில் அவர் தொழிலதிபராகியுள்ளார். இந்தியாவின் அழகு சாதன நிறுவனம் ஒன்றில் முதன்மை முதலீட்டாளராக இணைந்துள்ளார். இதை அந்த நிறுவனம் அறிவித்து இருக்கிறது. தற்போது தெலுங்கு மற்றும் தமிழில் உருவாகும் ‘வாரிசு’ படத்தில் விஜய் ஜோடியாக நடித்து வரும் ராஷ்மிகா மந்தனா, தெலுங்கில் ‘சீதா ராமம்’, ‘புஷ்பா 2’, இந்தியில் ‘குட் பை’, ‘அனிமல்’ ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார்.

Related Stories: