கோயம்பேடு மார்க்கெட்டில் 4 வியாபாரிகளுக்கு கொரோனா: பரிசோதனை தீவிரம்

சென்னை: கோயம்பேடு மார்க்கெட்டில் 4 வியாபாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்பேரில், பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கோயம்பேடு மார்க்கெட்டில், கடந்த 16ம் தேதி முதல் வியாபாரிகள் மற்றும் கூலி தொழிலாளர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இதுவரை 1,240 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில், 4 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, கோயம்பேடு பூ, பழம் மற்றும் காய்கறிகள், உணவு தானியம் ஆகிய மார்க்கெட்டிலும் கொரோனா பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து, சென்னை மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘கோயம்பேடு மார்க்கெட்டில் பூ, பழம், காய்கறி, உணவு தானியம் ஆகிய மார்க்கெட்டுகளில் ஒரு நாளைக்கு 150 முதல் 200 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்து வருகிறோம். தற்போது 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.’’ என்றனர்.

Related Stories: