அதிமுகவின் ஒற்றைத் தலைமைக்கு பச்சைக்கொடி காட்டாவிட்டால் ஓபிஎஸ் எதிர்காலம் கேள்விக்குறி: ஆர்.பி.உதயகுமார் எச்சரிக்கை..!

மதுரை: அதிமுகவின் ஒற்றைத் தலைமைக்கு பச்சைக்கொடி காட்டாவிட்டால் ஓபிஎஸ் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடும் என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; அதிமுகவில் ஏற்பட்ட பிளவுக்கு பிள்ளையார் சுழி போட்டவர் ஓ.பன்னீர்செல்வம்தான்; தொண்டர்களை அரவணைத்துச் செல்லாததே அவரின் வீழ்ச்சிக்கு காரணம். மறிந்த முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு கண்ணீருடன் தவித்து வந்த எங்களுக்கு ஆதரவு கொடுத்தவர், மக்கள் மனதில் நம்பிக்கை விதை விதைத்தவர் எடப்பாடி பழனிசாமி.

வரும் தேர்தலில் வாக்குகளை மக்கள் கொடுக்க தயாராக உள்ளார்கள் என்பதால் ஒற்றைத் தலைமை வேண்டும். அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை வழிநடத்த வேண்டிய ஓபிஎஸ், பராசக்தி வசனத்தை தலைமாட்டில் வைத்து தூங்குவேன் என யார் மனதையோ குளிர்விக்கும் வகையில் பேசுகிறார். எம்ஜிஆர், ஜெயலலிதா உணவை சாப்பிட்ட நாங்கள் ஒரே உணர்வோடு தான் இருப்போம். சந்தேக தலைமை வேண்டாம், நம்பிக்கைக்குரிய தலைமையே வேண்டும். அதிமுக பொதுக்குழுவில் நடந்த விரும்பத்தகாத நிகழ்வை யாரும் ஆதரிக்கவில்லை. குடும்ப நலனில் மட்டுமே ஓபிஎஸ் அக்கறை காட்டினார்.

அதிமுக தொண்டர்களை கண்டுகொள்ளவில்லை. அதிமுகவுக்கு நம்பிக்கைக்குரிய, வலியுமையான தலைமையே தேவை. அதிமுகவை முடக்கவே ஓபிஎஸ் தரப்பு முயற்சிக்கின்றனர். எத்தனை முறை ஓபிஎஸ்-ஐ பேச்சுவார்த்தைக்கு அழைப்பது? ; பேச்சுவார்த்தைக்கு கட்சியின் மூத்த தலைவர்களை வைத்து முயன்று இருக்கிறோம், ஆனால் பன்னீர்செல்வம் வருவதில்லை. ஒற்றை தலைமைக்கு ஆதரவளித்தால், ஓபிஎஸ் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும். கட்சி சீர்திருத்தத்திற்கு ஓபிஎஸ் உடன்பட்டால் தொண்டர்களின் மனதில் நிறைந்திருப்பார் இவ்வாறு கூறினார்.

Related Stories: