மழைநீர் வடிகால்வாய் பணிக்காக ஆலந்தூர் ஜிஎஸ்டி சாலையில் 2 நாள் போக்குவரத்து மாற்றம்

ஆலந்தூர்: மழைநீர் வடிகால் பணிக்காக ஆலந்தூர் ஜிஎஸ்டி சாலை பகுதியில் இன்றும் நாளையும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னை போக்குவரத்து தெற்கு மாவட்ட காவல்துறை சார்பில், மவுன்ட் போக்குவரத்து உட்கோட்டத்தில் மவுன்ட் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட ஜிஎஸ்டி சாலை, உள்செல்லும் சாலையில் நெடுஞ்சாலைத்துறை சார்பில், நிரந்தர மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடைபெற உள்ளது. இதையொட்டி இன்றும் நாளையும் இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணிவரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, ஜி.எஸ்.டி., சாலை விமான நிலையத்தில் இருந்து கிண்டி நோக்கி செல்லும் வாகனங்கள், கத்திப்பாரா பாலத்தின் மேலே சென்று கிண்டி போகும் வழியில் எவ்வித மாற்றமும் இன்றி செல்லலாம். பூந்தமல்லியில் இருந்து வரும் வாகனங்கள் மாற்றம் ஏதுமின்றி கத்திப்பாரா வழியாக செல்லலாம். வடபழனியில் இருந்த வரும் வாகனங்கள் தண்டுமா நகரில் யூ டர்ன் எடுத்து சிப்பெட் சந்திப்பில் வலதுபுறம் திரும்பி திருவிக. தொழிற்பேட்டை சாலை வழியாக கிண்டி பேருந்து நிலையம் வந்து அண்ணாசாலை சென்றடையலாம்.

வடபழனியில் இருந்து வரும் வாகனங்கள் அனைத்தும் 100 அடி சாலையில் இடது புறமாக திரும்பி திருவிக. தொழிற்பேட்டை சாலை வழியாக கிண்டி பேருந்து நிலையம் வந்த அண்ணாசாலையை சென்றடையலாம்.

Related Stories: