குயின்ஸ்லேண்ட் நிறுவனத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட ரூ.200 கோடி மதிப்புள்ள நிலம் மீட்பு: அதிகாரிகள் நடவடிக்கை

சென்னை: ஸ்ரீபெரும்புதூர் அருகே குயின்ஸ்லேண்ட் நிறுவனத்தால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட 200 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை வருவாய் கோட்டாட்சியர் தலைமையிலான அதிகாரிகள் கையகப்படுத்தினர். சென்னை பூந்தமல்லி அருகே செயல்படக்கூடிய பொழுதுபோக்கு பூங்காவான குயின்ஸ்லேண்டில், 32 ஏக்கர் 41 சென்ட் நிலம் மீட்கப்பட்டது. ஏறக்குறைய 200 ஏக்கருக்கு மேலாக இந்த குயின்ஸ்லேண்ட் நிறுவனம் செய்யப்பட்டு வருகிறது. இதில் பொழுதுபோக்கு பூங்கா அமைக்கப்பட்டு, பல்வேறு விளையாட்டுகள் நடைபெற்று வருகிறது. இங்கு ஏராளமானோர் வருவது வழக்கம்.

இந்தநிலையில், குயின்ஸ்லேண்ட் நிறுவனமானது, அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமிப்பு செய்திருப்பதாக கூறி, கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறநிலையத்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதன் அடிப்படையில் வழக்கு விசாரணை நடைபெற்றது. இந்நிலையில், இன்று பொழுதுபோக்கு பூங்காவான குயின்ஸ்லேண்டில் நீர்நிலை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டகாக கூறி ஸ்ரீபெரும்புதூர் கோட்டாட்சியர் தலைமையில் வருவாய்த்துறையினர் 32 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தியுள்ளனர். குயின்ஸ்லேண்ட் நிறுவனம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடத்தில் ரோப் கார் செயல்பட்டு வருகிறது.

பொழுதுபோக்கு பூங்காவிற்கு வரும் மக்கள் அங்குள்ள விளையாட்டுகளை சுற்றிபார்க்க ரோப் கார் பயன்படுகிறது. எனினும், ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடத்தில் செயல்படும் ரோப்காரின் கட்டிடத்திற்கு வருவாய் துறையினர் சீல் வைத்துள்ளனர். தொடர்ந்து, ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட 32 ஏக்கர் 41 சென்ட் நிலத்தை அதிகாரிகள் கைப்பற்றினர். ஏற்கெனவே பொழுதுப்போக்கு பூங்காவில் உள்ள 21 ஏக்கர் நிலம் அறநிலையத்துறைக்கு சொந்தமானது என்று வழக்கு தொடர்ந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்நிலையில் பொழுதுபோக்கு பூங்காவில் உள்ள 32 ஏக்கர் நிலம் வருவாய்துறைக்கு சொந்தமானது என அந்நிறுவனத்தினர் பதிலளித்ததால் வழக்கானது நிராகரிக்கப்பட்டது.

எனினும், வருவாய்த்துறையினர் தாமாகவே முன்வந்து, மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி உத்தரவின் பேரில் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இதனால், மொத்தமாக 32 ஏக்கர் 41 சென்ட் நிலமானது கையகப்படுத்தப்பட்டுள்ளது. கையகப்படுத்தப்பட்ட நிலத்தின் விலை ஏறக்குறைய ரூ.200 கோடிக்கும் மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது.   

Related Stories: