காஞ்சிபுரத்தில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம்: கலெக்டர் ஆர்த்தி அறிவிப்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் நாளை நடைபெறவுள்ளது. இதில், விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என காஞ்சிபுரம் மாவட்ட  கலெக்டர் ஆர்த்தி கூறியுள்ளார்.இது குறித்து கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:காஞ்சிபுரம் மாவட்டத்தின் மாதாந்திர விவசாயிகளின் நலன் காக்கும் நாள் கூட்டம் 24.06.2022 (வெள்ளிக்கிழமை) அன்று காலை 10.30 மணிக்கு காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி தலைமையில் மாவட்ட வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு கூட்டரங்கில் நடைபெற உள்ளது.இக்கூட்டத்தில், வேளாண் அறிவியல் நிலையம், காட்டுப்பாக்கம் வல்லுநர்கள் மற்றும் அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொண்டு வேளாண்மை தொடர்பான அறிவுரைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு விளக்கம் அளிக்க உள்ளனர். கூட்டம் நடைபெறும் அன்றைய தினம் பிரதான் மந்திரி நுண்ணீர் பாசனத் திட்டத்தில் இணைய வழி பதிவுகள் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில் பதிவு செய்ய விருப்பம் உள்ள விவசாயிகள் கீழ்கண்ட ஆவணங்களுடன் கலந்து கொண்டு பதிவு செய்து பயன் அடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.ஆதார் அட்டை - நகல், சிட்டா, அடங்கல் - நகல், நில வரை படம் - நகல், ரேஷன் கார்டு - நகல், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ - 1, இணையவழி சிறு / குறு விவசாய சான்று, வங்கி கணக்கு புத்தகம் - நகல், நிலத்தின் பரப்பளவு - பட்டா நகல் அரசு அறிவுரையின்படி, கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.  

Related Stories: