உலக செஸ் போட்டியை நடத்தும் தமிழக முதல்வருக்கு பிரக்ஞானந்தா நன்றி

காஞ்சிபுரம்: சென்னைக்கு அருகே மாமல்லபுரத்தில் 44வது ஒலிம்பியாட் உலக செஸ் போட்டியை நடத்துவதற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு செஸ் மாஸ்டர் பிரக்ஞானந்தா நான்றி தெரிவித்துள்ளார்.உலக சாம்பியனான மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்திய சென்னையை சேர்ந்த 16 வயது செஸ் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா. செஸ் உலகில் பிரம்மாண்ட சாதனையை படைத்துள்ளார். இந்நிலையில், மாமல்லபுரத்தில் 44வது ஒலிம்பியாட் செஸ் போட்டி  வரும் ஜூலை 28ம் துவங்கி ஆகஸ்ட் 10ம் தேதி  வரை நடைபெறுகிறது. இதில், 187 நாடுகளை சேர்ந்த 2,500க்கும் மேற்பட்ட  செஸ் வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.

இந்நிலையில், காஞ்சிபுரம் சங்கரா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 8வது தேசிய யோகா தின நிகழ்ச்சியில் கலந்துகொள்ள பிரக்ஞானந்தா காஞ்சிபுரத்திற்கு  வந்தார். இந்நிகழ்ச்சிக்குப் பின் காஞ்சிபுரம் காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலில் சிறப்பு சாமி தரிசனம் செய்தார்.அதன்பின் பிரக்ஞானந்தா செய்தியாளர்களிடம் கூறுகையில், மாமல்லபுரம் போட்டிக்கான பயிற்சிகள் சிறப்பாக இருந்தது. இப்போட்டி தமிழகத்தில் நடைபெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்காக செஸ் போர்டு வாரியத்திற்கும், தமிழக முதல்வருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறோன். மேலும், தான் சிறப்பாக பயிற்சி மேற்கொண்டு வருகிறேன். முழு திறமையையும்  வெளிப்படுத்தி வெற்றி பெறுவேன்’ என்றார். இந்நிகழ்வின்போது அவரது தாயார் நாகலட்சுமி,  பயிற்சியாளர் ரமேஷ்பாபு ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories: