வேளாண் சட்டங்களை போன்று அக்னி பாதை திட்டத்தையும் ஒன்றிய அரசு திரும்பப் பெறும் நிலை வரும்: ராகுல் காந்தி கருத்து!!

டெல்லி : வேளாண் சட்டங்களை போன்று அக்னி பாதை திட்டத்தையும் ஒன்றிய அரசு திரும்பப் பெறும் நிலை வரும் என்று காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். ஒன்றிய அரசு அறிவித்த அக்னி பாதை திட்டத்திற்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த திட்டம் நமது படைகளின் செயல்திறனை குறைக்கும் என்று அக்கட்சி தலைவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.இந்த நிலையில் இந்த திட்டத்தை திரும்பப் பெறும் வலியுறுத்தி காங்கிரஸ் சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி ஜந்தர் மந்தரில் நாளை நடைபெறும் போராட்டத்தில் காங்கிரஸ் எம்பிக்கள், நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

இதனிடையே அக்னி பாதை திட்டம் குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி,வேளாண் சட்டங்களை பிரதமர் மோடி திரும்பப் பெறுவார் என முன்னதாகவே தாம் சுட்டிக் காட்டியதை குறிப்பிட்டுள்ளார்.அதே போல அக்னி பாதை திட்டத்தையும் திரும்பப் பெறும் நிலை வரும் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார். 8 ஆண்டுகால பாஜக ஆட்சியில் விவசாயிகள், ராணுவ வீரர்கள் தொடர்ந்து அவமதிக்கப்பட்டுள்ளதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.  நாட்டின் இளைஞர்களுக்கு தலைவணங்கி திட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்றும் ராகுல் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: