பாஜ தலைவர் அண்ணாமலையை கண்டித்து செ.கு.தமிழரசன் தலைமையில் குடியரசு கட்சி ஆர்ப்பாட்டம்

சென்னை: தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை, தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் குறித்து டுவிட்டரில் வெளியிட்ட பதிவுக்கு கண்டனம் தெரிவித்தும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இந்திய குடியரசு கட்சி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில்  கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு, இந்திய குடியரசு கட்சி தலைவர் செ.கு.தமிழரசன் தலைமை தாங்கி கண்டன உரை நிகழ்த்தினார். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் அண்ணாமலை மீது வன்கொடுமை சட்டதின் கீழ் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோஷங்கள் எழுப்பினர்.

இந்திய குடியரசு கட்சி மாநில பொதுச்செயலாளர் வா.பிரபு, மாநில தொழிற்சங்க செயலாளர் டி.இருதயநாதன், வழக்கறிஞர் க.துர்வாசன், செம்மை தனசேகர், சா.சாலமோன், என்.ரமேஷ்குமார், வ.கபிலன், எம்.செந்தில்நாதன், பெ.சிவக்குமார், கிக்பாக்ஸர் முத்து, கருணாகரன், அ.செல்வம், பார்வதி, ஜெய்பீம் ஜெயபிரதா, பிரபு, சுகுமாரன், மு.சிற்றரசு, ஆனந்த், தொட்டி வெங்கடேசன், ராஜ்குமார், ஏழுமலை, பேனர்ஜி சதீஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

 

ஆர்ப்பாட்டத்தில், செ.கு.தமிழரசன் பேசும்போது, \”போலீஸ் அதிகாரியாக இருந்த அண்ணாமலை சட்டம் தெரிந்தவர். அவர் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான கருத்தை பதிவிட்டு இருப்பது கண்டிக்கத்தக்கது. அண்ணாமலை மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும். அவர் வருத்தம் தெரிவிக்கவேண்டும். ஒரு நடிகை இதுபோன்று பேசியதும் நடவடிக்கை எடுத்த போலீசார் அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்கவில்லை. நியாயம் கிடைக்கும் வரை தொடந்து போராடுவோம்’’ என்றார். ஆர்ப்பாட்டத்தில். ஏராளமான குடியரசு கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்துகொண்டனர்.

Related Stories: