பெருமாட்டுநல்லூர் ஊராட்சியில் கைப்பந்து பயிற்சி நிறைவு

கூடுவாஞ்சேரி: பெருமாட்டுநல்லூர் ஊராட்சியில் விஷன் அகாடமி சார்பில் கைப்பந்து  விளையாட்டு பயிற்சி நிறைவு விழா நடந்தது. செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி அடுத்த பெருமட்டுநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்டது தங்கப்பாபுரம். இங்குள்ள, விளையாட்டு திடலில் விஷன் அகாடமி சார்பில் சிறுவர்களுக்கான கோடைக்கால கைப்பந்து விளையாட்டு பயிற்சி கடந்த 2 வாரங்களாக நடந்து வந்தன. அதன் நிறைவு விழா நேற்று நடைபெற்றது.இதில், ஒன்றிய திமுக மாணவரணி துணை அமைப்பாளர் வி.கே.பிரபு தலைமை தாங்கினார். அகில இந்திய கைப்பந்து பயிற்சியாளர்கள் கோபால், ஓம்பிரகாஷ், ஸ்டீபன், அமீத், பாஸ்கர், ரவிச்சந்திரன், ராமலிங்கம், சேகர், பாலன், திருஞானம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

திமுக ஒன்றிய பொறுப்பு குழு உறுப்பினரும், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவருமான கே.எஸ்.ரவி அனைவரையும் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக கூடுவாஞ்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் கீதா, வருமான வரித்துறை ஆய்வாளர்கள் கேசவன், பிறைசூடன், சுங்க துறை அலுவலர் பிரவீன், வணிக வரித்துறை அலுவலர் தயாநிதி ஆகியோர் கலந்துகொண்டு பயிற்சி முடித்த பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினர்.

இதில், ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள், தங்கப்பாபுரம், ராஜாஜி நகர், ஸ்ரீ ராம்சங்கரி நல சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Related Stories: