தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள கோவை - ஷீரடி ரயிலை அரசே இயக்க வேண்டும்: ஒன்றிய அமைச்சருக்கு டி.ஆர்.பாலு கடிதம்

புதுடெல்லி: தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள கோவை-ஷீரடி ரயில் சேவையை இந்திய ரயில்வே ஏற்க வேண்டும் என்று ஒன்றிய ரயில்வே அமைச்சருக்கு டி.ஆர்.பாலு கடிதம் எழுதி உள்ளார்.  ஒன்றிய அரசின் பாரத் கவுரவ் திட்டத்தின் கீழ் கோவை-ஷீரடி இடையே தனியார் ரயில் சேவை நேற்று முன்தினம் தொடங்கப்பட்டது. இந்த ரயிலில் வசூலிக்கப்படும் கட்டணம், பல மடங்கு அதிகம். இதற்கு பல்வேறு தரப்பினர் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு எம்பி, ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு எழுதி உள்ள கடித்தத்தில் கூறியிருப்பதாவது:  கோவை-ஷீரடி இடையே தொடங்கப்பட்டுள்ள தனியார் ரயில் சேவை, பொதுத்துறைக்கும், மக்களுக்கும் எதிராக உள்ளதால் இதை திமுக ஏற்று கொள்ளவில்லை. தொழிற்சாலைகள், ஆன்மிக தலங்களை இணைக்க ரயில் சேவை முக்கிய பங்கு வகிக்கிறது. இதில், தனியார் சேவையை அனுமதிப்பதால் இந்திய ரயில்வேயின் பங்கு பறிக்கப்படுவதாக அமையும்.  இந்த ரயிலில் வசூலிக்கப்படும் கட்டணம், ரயில் சேவையை இயக்கும் தனியாருக்கு மட்டுமே லாபம். எனவே, தனியாருக்கு விடப்பட்ட கோவை-ஷீரடி ரயில் சேவையை உடனடியாக திரும்ப பெற்று, தமிழக மக்களின் எதிர்ப்பார்ப்பை நிறைவேற்றும் விதமாக இந்தியன் ரயில்வேயிடம் ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு கடிதத்தில் அவர் கூறியுள்ளார்.

Related Stories: