நாட்டிலேயே முதல்முறையாக கோவையில் இருந்து சீரடிக்கு தனியார் ரயில் சேவை நாளை துவக்கம்: தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆய்வு

கோவை: நாட்டிலேயே முதல்முறையாக தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டு கோவையில் இருந்து சீரடிக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில் வரும் 14-ம் தேதி கோவையில் இருந்து முதல் பயணத்தை துவங்க உள்ளது. வாரம் ஒரு முறை இந்த ரயில் இயக்கப்படவுள்ளது. இதன் டிக்கெட் முதல் பராமரிப்பு பணிகள் வரை தனியார் நிறுவனமே மேற்கொள்ள உள்ளது. பிரதமர் மோடியின் பாரத் கவுரவ் திட்டத்தின் கீழ் தனியார் வசம் கொடுக்கப்பட்டுள்ள ரயிலில் உள்கட்டமைப்பு வடிவங்களை தனியார் நிறுவனம் மேற்கொண்டுள்ளது. இதற்காக, போத்தனூர் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளை தெற்கு ரயில்வே பொது மேலாளர் பி.ஜி.மல்யா, சேலம் கோட்ட மேலாளர் கவுதம் சீனிவாசன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

Related Stories: