பரஸ்பர சம்மதத்துடன் பாலியல் உறவு கொண்டதால் கிறிஸ்டியானோ மீதான பலாத்கார வழக்கு தள்ளுபடி; அமெரிக்க நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

லாஸ் வேகாஸ்: பெண் ஒருவரின் பரஸ்பர சம்மதத்துடன் பாலியல் உறவு கொண்டதால் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ மீதான பாலியல் பலாத்கார வழக்கை அமெரிக்க நீதிமன்றம் அதிரடி தள்ளுபடி செய்து தீர்ப்பளித்துள்ளது. சர்வதேச கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு எதிராக, கடந்த 2009ம் ஆண்டில் நெவாடாவைச் சேர்ந்த கேத்ரின் மயோர்கா என்ற பெண் ஒருவர் அமெரிக்க நீதிமன்றத்தில் பாலியல் வழக்கு தொடர்ந்தார். அதில், லாஸ் வேகாஸில் இருக்கும் போது சர்வதேச கால்பந்து வீர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம்சாட்டியிருந்தார்.

அதற்கு இழப்பீடாக 3,75,000 டாலர் தரவேண்டும் என்று நீதிமன்றத்தில் முறையிட்டு இருந்தார். இவ்வழக்கை விசாரித்த லாஸ் வேகாஸ் நீதிபதி, ரகசிய ஆவணங்களைப் பயன்படுத்தி கிறிஸ்டியானோ ரொனால்டோ மீது பாலியல் பலாத்கார குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. இரு தரப்பு வழக்கறிஞர்களும் குற்றச்சாட்டுகள் மீதான ஆதாரங்களை சரியாக சமர்ப்பிக்கவில்லை. அதனால் இவ்வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று தீர்ப்பளித்தார். இவ்வழக்கு விசாரணையின் போது, ரொனால்டோவின் சட்டக் குழு அளித்த பதில் மனுவில், புகார் அளித்த பெண்ணும், கிறிஸ்டியானோ ரொனால்டோவும் பரஸ்பர சம்மதத்துடன் பாலியல் உறவு வைத்துக் கொண்டனர்.

இதனை பாலியல் பலாத்காரமாக எடுத்துக் கொள்ள முடியாது என்றும், ரகசியத்தன்மை ஒப்பந்தம் இருவருக்கும் இருந்தது என்று வாதிட்டனர். இந்த வாதத்திற்கு, சம்பந்தப்பட்ட பெண்ணின் வழக்கறிஞர்கள் குழு சரியான பதிலை தெரிவிக்க முடியவில்லை. அதனால், இவ்வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான கிறிஸ்டியானோ ரொனால்டோ, தற்போது அதிலிருந்து விடுக்கப்பட்டதால் அவரது ரசிகர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

Related Stories: