வெண்பேடு கிராமத்தில் பைரவர் மலைக்கோயிலில் ஆய்வு

திருப்போரூர்: திருப்போரூர் ஒன்றியம், வெண்பேடு கிராமத்தில் மலையின் மீது மகா கால பைரவர் கோயில் உள்ளது. இக்கோவிலை சீரமைத்து மலைப்பாதை  அமைத்துத் தர வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்திருந்தனர். இதையடுத்து, திருப்போரூர் ஒன்றியக்குழு தலைவர் எஸ்.ஆர்.எல். இதயவர்மன் நேற்று அறநிலையத்துறை காஞ்சிபுரம் இணை ஆணையர் வான்மதி, செங்கல்பட்டு உதவி ஆணையர் லட்சுமிகாந்த பாரதிதாசன், ஆய்வாளர் பாஸ்கரன் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினார். அப்போது, அங்கு வந்த பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர். இதைத்தொடர்ந்து அறநிலையத்துறை அமைச்சரை இந்த கோயிலுக்கு அழைத்து வருவதாக உறுதி அளித்த ஒன்றியக்குழுத் தலைவர் இதயவர்மன், மலைக் கோயிலுக்கு வாகனங்கள் மேலே செல்லும் வகையில் சாலை அமைத்தல், மலையின் மீது குடிநீர், கழிப்பறை வசதி செய்தல் போன்ற அடிப்படை வசதிகளை செய்து தருவதாக உறுதி அளித்தார்.

Related Stories: