அதிகரிக்கும் கொரோனா!: ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ் காந்தி இளைஞர் மேம்பாட்டு பயிற்சி மையத்துக்கு விடுமுறை..விடுதி மாணவர்கள் சொந்த ஊர் செல்ல அறிவுரை..!!

காஞ்சிபுரம்: கொரோனா அதிகரிப்பால் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு பயிற்சி மையத்துக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 35 மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து மையத்துக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் பயின்று வருகிறார்கள். இரு தினங்களுக்கு முன்பு மாணவர்களுக்கு லேசான கொரோனா அறிகுறி தென்பட்டுள்ளது.

உடனடியாக அருகே உள்ள சுகாதாரத்துறையினர் அவர்களுக்கு பரிசோதனை மேற்கொண்டனர். பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 235 மாணவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் தற்போது வரை 35 பேருக்கு பாதிப்பு உறுதியாகியுள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களையும் கண்டறிந்து தனிமைப்படுத்தும் முயற்சியில் சுகாதாரத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கொரோனா அதிகரிப்பால் ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு பயிற்சி மையத்துக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. விடுதியில் தங்கியுள்ள மாணவர்கள் அனைவரும் சொந்த ஊருக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஜூன் 13ம் தேதி முதல் அடுத்த உத்தரவு வரும் வரை ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெறும் என்று உதவி பதிவாளர் அறிவித்துள்ளார்.

Related Stories: