தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து இந்திய அணியின் கே.எல்.ராகுல், குல்தீப் யாதவ் விலகல்

டெல்லி: தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து இந்திய அணியின் கே.எல்.ராகுல் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் விலகியுள்ளனர். தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் இந்திய அணி கேப்டனாக ரிஷப் பண்ட், துணை கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியா - தென் ஆப்பிரிக்கா மோதும் முதல் டி20 போட்டி டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நாளை தொடங்க உள்ளது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்ஆப்பிரிக்கா அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. இந்நிலையில் கே.எல்.ராகுல் தலைமையிலான 18 பேர் கொண்ட குழுவை பிசிசிஐ அறிவித்தது.

இந்த தொடரில் ஐபிஎல் தொடரில் சிறப்பாக ஆடிய இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ரோஹித்சர்மா, விராட்கோஹ்லி, பும்ரா, முகமதுஷமி, ஜடேஜா போன்ற மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் தினேஷ் கார்த்திக்கை சேர்த்துள்ளதால், இத்தொடர் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பவுமா தலைமையிலான தென்ஆப்பிரிக்க அணியிலும், ஐபிஎல் கிரிக்கெட்டில் அசத்திய இளம் வீரர்கள் இடம்பிடித்துள்ளனர்.

இதையடுத்து தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டி நாளை நடைபெற உள்ள நிலையில் இந்திய அணி கேப்டனாக நியமிக்கப்பட்ட கே.எல்.ராகுல் மற்றும் இடது கை பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் ஆகியோர் காயம் காரணமாக விலகியுள்ளனர். இதனால் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் இந்திய அணி கேப்டனாக ரிஷப் பண்ட், துணை கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories: