ஆலந்தூர் ஜமாபந்தியில் மனைப் பட்டா, ஓய்வூதியம் கேட்டு: கொடுத்த மனு மீது உடனே தீர்வு

ஆலந்தூர்: சென்னை ஆலந்தூரில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி கிண்டி வருவாய் கோட்டாட்சியர் சாய்வர்த்தினி தலைமையில் நடைபெற்றது. தாசில்தார்கள் தியாகராஜன், பிரமிளா முன்னிலை வகித்தனர். ஆலந்தூர் மண்டல குழு தலைவர் என்.சந்திரன், வருவாய் கோட்டாட்சியர் சாய்வர்த்தினி ஆகியோர் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று கொண்டனர். ஏராளமான பொதுமக்கள், தங்களுக்கு மனை பட்டா மற்றும் பட்டா மாற்றம், ஓய்வூதியம் ஆகியவற்றை கேட்டு மனுக்கள் கொடுத்தனர். நிறையபேர், நிறுத்தப்பட்ட முதியோர்  விதவை, பென்ஷன் ஆகியவற்றை மீண்டும் வழங்க வேண்டும் என்று மனு கொடுத்தனர்.

ஜாதி சான்றிதழ். வருவாய் சான்றிதழ் கேட்டு மனு கொடுத்த 10 பேருக்கு உடனடியாக சான்றிதழ் வழங்கப்பட்டது. இதில் தாசில்தார்கள் தியாகராஜன், பிரமிளா, மாநகராட்சி கவுன்சிலர் சாலமோன், ஆலந்தூர் பகுதி திமுக செயலாளர் பி.குணாளன், பகுதி நிர்வாகிகள கோல்ட் பிரகாஷ், ஆர்.டி. பூபாலன், ஜெ.நடராஜன், சீனிவாசன் ஏசுதாஸ், சரவணா உள்பட பலர் கலந்துகொண்டனர். ஜமாபந்தி இன்றும் நடைபெறுகிறது. இதில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொள்கிறார்.

Related Stories: