தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 149 கோயில்களில் திருப்பணிகள் தொடங்க மாநில அளவிலான வல்லுநர் குழு ஒப்புதல்

சென்னை: தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 149 கோயில்களில் திருப்பணிகள் தொடங்க மாநில அளவிலான வல்லுநர் குழு ஒப்புதல் அளித்துள்ளது. தமிழகத்தில் உள்ள கோயில்களில் திருப்பணிகள் முடிந்து குடமுழுக்கு நடத்த அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவுரை வழங்கியுள்ளார். இதையடுத்து, புராதனமான மற்றும் தொன்மையான கோயில்களை தொன்மை மாறாமல் புதுப்பித்தல் தொடர்பான மாநில அளவில் வல்லுநர் குழு கூட்டம் சென்னை அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திருப்பணி இணை ஆணையர் ஜெயராமன், ஆகம வல்லுநர் குழு உறுப்பினர் கோவிந்தராஜ பட்டர், ஆனந்த சயன பட்டாச்சாரியர், சந்திரசேகரபட்டர், தலைமை பொறியாளர் (ஓய்வு) முதுநிலை ஆலோசகர் கே.முத்துசாமி, தொல்லியல் துறை கண்காணிப்பாளர் வசந்தி, சத்தியமூர்த்தி, ராமமூர்த்தி, கல்வெட்டு படிமங்கள் நிபுணர்கள் (ம) நுண்கலை நிபுணர் சிவானந்தம், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அதன்படி தஞ்சாவூர் மாவட்டம் திரௌபதியம்மன் கோயில் (கிராமப்புற திருப்பணி), பிடாரி அம்மன் கோயில், திருவாரூர்  மாவட்டம் நன்னிலம் மாரியம்மன் கோயில், இடம்பாவனம், சற்குணநாதசுவாமி கோயில், மயிலாடுதுறை மாவட்டம், திருமூலநாத சுவாமி கோயில், செம்மங்குடி, காமாட்சியம்மன் கோயில், தென்காசி மாவட்டம்,  வடகாசியம்மன் கோயில், தாருகாபுரம், ராஜகோபால சுவாமி கோயில், தூத்துக்குடி மாவட்டம், திருவைகுண்டம் பொய்சொல்லா மெய்யன் சாஸ்தா கோயில், கன்னியாகுமரி மாவட்டம் கல்குளம் தாலுகா நாராயண சுவாமி கோயில், முப்பிடாரி அம்மன் திருக்கோயில், கோவை மாவட்டம், பீளமேடுபுதூர் மாரியம்மன் கோயில், பேரூர் வெங்டேசப்பெருமாள் கோயில், வேலூர், சென்னகேசவப்பெருமாள் கோயில், ரண கங்கை அம்மன் கோயில், சென்னை ஓட்டேரி, அனுமந்தராயர் எனும் ஆஞ்சநேயர் கோயில், சூளை, வேம்புலியம்மன் திருக்கோயில், வால்டாக்ஸ், கற்பக சுந்தர விநாயகர் கோயில், ஆலந்தூர், ஆர்டிலரி தர்மராஜா கோயில், காஞ்சிபுரம் பாலீஸ்வரர் கோயில், அய்யம்பேட்டை சக்தி மாரியம்மன் கோயில் உட்பட 149க்கும் மேற்பட்ட கோயில்களில் திருப்பணிகள் தொடங்குவதற்கான மாநில அளவிலான வல்லுநர் குழு கூட்டத்தில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.

இக்கோயில்களில் மாநில அளவிலான வல்லுநர் குழுவின் பரிந்துரைகளுக்கு பின்பு திருப்பணிகளுக்கு திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு விரைவில் பணிகள் தொடக்கப்படும். தமிழகத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோயில்களில் திருப்பணிகள் தொடங்குவதற்கு புராதன மற்றும் தொன்மையான கோயில்களை தொன்மை மாறாமல் புதுப்பித்து  பராமரித்தல் பொருட்டு புனரமைப்பு பணிக்கான மதிப்பீட்டினை பரிசீலித்து அதன்பின்பு திருப்பணிகள் தொடங்க மாநில அளவிலான வல்லுநர் குழு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

Related Stories: