இடைக்கழிநாடு பேரூராட்சியில் சுடுகாட்டிற்கு சாலை வசதி: பொதுமக்கள் கோரிக்கை

செய்யூர்: செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் வட்டம் இடைக்கழிநாடு பேரூராட்சிக்குட்பட்ட 1வது வார்டில் நைனார் குப்பம் பகுதி அமைந்துள்ளது. இங்கு 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு என சொந்தமான சுடுகாடு பகுதி ஆனியன் தோட்டம் பகுதியில் இருந்து 700 மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.  கடந்த பல ஆண்டு காலமாக இப்பகுதியில் இறந்தவர்களை இச்சாலை வழியாக சுடுகாட்டிற்கு கொண்டு சென்று அடக்கம் செய்வது வழக்கம்.  இந்த ஆனியன் தோட்டம் தெருச்சாலை, மண் சாலையாக இருப்பதால் பொதுமக்கள் சடலங்களை கொண்டு செல்லும் போது பெரும் சிரமத்துக்கு ஆளாகின்றனர்.    இதனால் இப்பகுதியில் தார்சாலை அல்லது சிமென்ட் சாலை அமைத்து தர வேண்டும் என மக்கள் நீண்டகாலமாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.இருப்பினும், இதுநாள் வரை அதற்கான நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபடவில்லை என அப்பகுதி மக்களிடையே குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  எனவே, தார்சாலை அல்லது சிமென்ட் சாலை அமைத்துத்தர வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: